New Updates! Fresh news just arrived.

உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் செய்முறைப் பரீட்சைக்கான த...

News

உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

February 2, 2026 8:33 pm
உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரத் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் செய்முறைப் பரீட்சைக்கான திகதியினை இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பரீட்சையின் எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளுக்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் 07.02.2026 ஆம் திகதி தொடக்கம் 11.02.2026 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 74 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாடசாலைப் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் உரிய பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அவர்கள் தமது விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கும் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் இருப்பின், அவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக 02.02.2026 ஆம் திகதி தொடக்கம் தமது அனுமதி அட்டைகளை தரவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now