New Updates! Fresh news just arrived.

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நேர்முகத்தேர்வுக்கான திகதி ...

News

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நேர்முகத்தேர்வுக்கான திகதி அறிவிப்பு!

April 13, 2026 4:38 pm
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நேர்முகத்தேர்வுக்கான திகதி அறிவிப்பு!
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இந்த நேர்முகத் தேர்வுகள் அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரப் பரீட்சையினுடைய பெறுபேறுகளினடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்கள் உள்வாங்கப்பட உள்ளனர்.

நேர்முகத் தேர்வுகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கான இணைப்பு கீழே,

https://moe.gov.lk/en/selected-student-teacher-name-list-for-the-national-colleges-of-education-ncoes-base-on-g-c-e-a-l-examinations-result-in-year-2023-and-2024/
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now