New Updates! Fresh news just arrived.

யோஷிதவின் மனு மீதான விசாரணைக்கான திகதி நிர்ணயம்!

News

யோஷிதவின் மனு மீதான விசாரணைக்கான திகதி நிர்ணயம்!

June 3, 2026 3:38 pm
யோஷிதவின் மனு மீதான விசாரணைக்கான திகதி நிர்ணயம்!
நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய புதல்வரான யோஷித ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மறுசீராய்வு மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது.

இதன்படி, குறித்த மனுவை ஜூன் மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு அழைப்பதற்கும் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

குறித்த மனுவானது இன்று (03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீண்டநேரம் பரிசீலிக்கப்பட்ட பின்பு இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இம்மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான யோஷித ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததாக எமது நீதிமன்றத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now