முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின்...
News
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மேன்முறையீட்டு விசாரணைக்கான திகதி நிர்ணயம்!
2015-ஆம் ஆண்டில் தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரைக் கடத்தி, தாக்கி, சட்டவிரோதமாக சிறைவைத்த குற்றத்திற்காக கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டது.
குறித்த மேன்முறையீட்டு விசாரணை மனு, நீதிபதிகள் பி. குமரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, மேல்முறையீட்டாளர் மற்றும் பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ ஆஜராக வேண்டும் என்றும், விசாரணைக்கான திகதியை வழங்குமாறும் கோரினார்.
ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு குறுகிய திகதியை வழங்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, மனுவை ஆகஸ்ட் 6 ஆம் திகதியன்று விசாரணைக்கு அழைக்குமாறு அமர்வு உத்தரவிட்டது.
தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்த அமில பிரியங்கா அமரசிங்க என்ற இளைஞரை, 2015 டிசம்பர் 21 அன்று கடத்தி, சட்டவிரோதமாக சிறைவைத்த குற்றத்திற்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக பிரேமச்சந்திராவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 2024 ஜூன் 28 அன்று 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 20,000/- ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
பிரதிவாதி ஹிருனிக பிரேமச்சந்திர, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்திலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி, இந்த மேல்முறையீட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.