New Updates! Fresh news just arrived.

யோஷித ராஜபக்ஷவின் வழக்கை விசாரணை செய்ய திகதி நிர்ணயம்! - ...

News

யோஷித ராஜபக்ஷவின் வழக்கை விசாரணை செய்ய திகதி நிர்ணயம்!

September 28, 2026 1:02 pm
யோஷித ராஜபக்ஷவின் வழக்கை விசாரணை செய்ய திகதி நிர்ணயம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கை, எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முன் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ வழக்கு விசாரணைக்கு இன்று (28) அழைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இரண்டாவது பிரதிவாதியான டெய்சி போரஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனில் சில்வா, நீதிமன்றத்தில் ஒரு மருத்துவ அறிக்கையினை சமர்ப்பித்தார்.

இதன் பின்னர் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நீதிபதி, குறித்த வழக்கை நவம்பர் மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.

சுமார் 57 மில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தினை 3 வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ததன் ஊடாக, பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டி, யோஷிதா ராஜபக்ஷ மற்றும் டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குறித்த வழக்குப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now