New Updates! Fresh news just arrived.

பஷார் அல்-அசாத் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை

News

பஷார் அல்-அசாத் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை

August 12, 2026 6:30 am
பஷார் அல்-அசாத் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத், அவரது சகோதரர் மற்றும் அவரது உறவினரான ஆட்டெஃப் நஜீப் ஆகிய மூவருக்கும் சிரிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

14 ஆண்டுகளாக இடம்பெற்ற சிரிய உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த மோதலில் சுமார் ஐந்து இலட்சம் பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாத் மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலையாகாத நிலையில், அவர்களுக்கு எதிரான விசாரணை இடம்பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2011ஆம் ஆண்டு தாரா பகுதியில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்ததாகக் கூறப்படும் அசாத்தின் உறவினரான ஆட்டெஃப் நஜீப்புக்கும் இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அசாத் மற்றும் அவரது சகோதரர் தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட நஜீப் நீதிமன்றத்தில் சிறைச்சாலை உடையில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தபோதே அவருக்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now