New Updates! Fresh news just arrived.

கொள்கலன் குறித்த விசாரணையை மூன்று மாதங்களுக்குள் நிறைவுறு...

News

கொள்கலன் குறித்த விசாரணையை மூன்று மாதங்களுக்குள் நிறைவுறுத்த முடிவு!

January 27, 2026 7:15 pm
கொள்கலன் குறித்த விசாரணையை மூன்று மாதங்களுக்குள் நிறைவுறுத்த முடிவு!
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவை ஒவ்வொரு புதன்கிழமையும் பி.ப 2.00 மணிக்குக் கூட்டி விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் தலைமையில் 2026.01.21ஆம் திகதி முதல் தடவையாகக் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கு அமைய இக்குழு 2026.01.28ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

குழுவின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் முறை மற்றும் குழுவிற்கு அழைக்கப்பட வேண்டிய தரப்பினர் குறித்து ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், குழுவின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

மூன்று மாத காலத்திற்குள் விசாரணை நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாக குழுவின் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதியமைச்சர் சுனில் வட்டகல, வலுசக்தி பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now