சுரேஷ் சலேவின் மனு மீதான இடையீட்டு மனுக்கள் தொடர்பான அறிவ...
News
சுரேஷ் சலேவின் மனு மீதான இடையீட்டு மனுக்கள் தொடர்பான அறிவிப்பு ஒத்திவைப்பு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சவாலுக்கு உட்படுத்தி, முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனுவுக்கான இடையீட்டு மனு குறித்த அறிவிப்பு பிற்போடப்பட்டுள்ளது.
கருத்துக்களை முன்வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த இடைக்கால மனுக்கள் மீதான உத்தரவை எதிர்வரும் 22 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.
குறித்த உத்தரவு இன்று (14) அறிவிக்கப்படவிருந்த போதிலும், அது பிற்போடப்பட்டுள்ளது.
பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட சில பௌத்த துறவிகள், மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றினால் இந்த இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.