மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை: 7 பேர் கைது!
News

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் மான்களை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் 5 விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையப் பகுதியில் வேட்டையாடப்பட்ட மான் இறைச்சியை வெளியில் கொண்டு செல்ல முற்பட்டபோது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக மத்தள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மற்றும் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் ஒன்றும் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.