New Updates! Fresh news just arrived.

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்திய பாதுகாப்பு அமைச்...

News

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

September 9, 2026 11:37 am
ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (09) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வு) உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பிலும் ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயத்தின்போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமை இந்த விஜயத்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now