தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்: மேலும் இருவர் கைது!
News

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (25) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், தாக்குதலுக்கு உதவி வழங்கியதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.
கைது நடவடிக்கையின்போது அவர்களிடமிருந்து 11 கிராம் 960 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
30 மற்றும் 31 வயதுடைய குறித்த இருவரும் பிலியந்தலை மற்றும் கஹதுடுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.