New Updates! Fresh news just arrived.

ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி: யாழில் போ...

News

ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி: யாழில் போராட்டம்!

March 24, 2026 3:13 pm
ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி: யாழில் போராட்டம்!
வடக்கு மாகாண கல்வி அமைச்சினுடைய இடமாற்ற சபையினால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்குமாறு கோரி கடந்த 8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டங்களில் சேவையினை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை இன்று (24) முன்னெடுத்திருந்தனர்.

ஒவ்வொரு வருடமும் இடமாற்ற சபையால் ஆசிரியர்களினது இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் குறிப்பாக 01.01.2026 ஆம் திகதியன்று வழங்கவென பட்டியலிடப்பட்ட இடமாற்றங்களானது ஒருசிலரது சுயனலங்களுக்காக தடுக்கப்பட்டு வருவதாகவும், இது எமது உரிமைகளை திட்டமிட்டு பறிப்பதாக அமைந்துள்ளதாகவும், நாம் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்துக்கிணங்க எமது சேவைகளினை சரியாக செய்து முடித்துள்ளோம் என்றும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனாலும் வழங்கப்பட்ட இடமாற்றமானது இன்னும் எமக்கு கிடைக்காத நிலை இருக்கின்றது. எமக்கு நீதி வேண்டும். அரசியலும் அதிகாரமும் எமது நியாயத்தினை பறிக்கின்றது.

எனவே துறைசார் அதிகாரிகள் சுயநலவாதுகளினுடைய சதிக்கு இடம் கொடுக்காது எமது உணர்வுகளினை மதித்து நீதியை தரவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now