ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரனுக்கு நீதி கோரி பருத்தித்துற...
News
ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரனுக்கு நீதி கோரி பருத்தித்துறையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்!
வடமராட்சி - கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 19 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், குறித்த சம்பவத்திற்காக நீதி கோரி யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் இன்று கவனயீர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
ஊடக செயற்பாட்டின் பின்னர் வீடு திரும்பிய நிலையில் துன்னாலை கலிகை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வைத்து கடந்த 15.02.2007 அன்று இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில், காணாமலாக்கப்பட்டார்.
இதன்படி, 19 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இராமச்சந்திரன் உயிருரோடு இருக்கின்றாரா இல்லையா என்பது தெரியாதுள்ள நிலையில் அவர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கேட்டும் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தினுடைய ஏற்பாட்டில் பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது.
பூ.லின்ரன்