New Updates! Fresh news just arrived.

கல்முனையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் கண்டன ஆர்ப்பாட்டம்...

News

கல்முனையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் கண்டன ஆர்ப்பாட்டம்: சட்டத்தரணி படுகொலைக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம்!

February 16, 2026 4:22 pm
கல்முனையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் கண்டன ஆர்ப்பாட்டம்: சட்டத்தரணி படுகொலைக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம்!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட துயரச்சம்பவத்தினை கண்டித்து இன்று (16) காலை கல்முனை நீதிமன்ற வளாகத்தின் முன்பாக அமைதியான கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கான விசேட பொதுக்கூட்டம் இன்று காலை 9.00 மணிக்கு கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற நிலையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கருப்பு பட்டி அணிந்த சட்டத்தரணிகள், “சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படுக”, “சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பு வழங்குக” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களினை எழுப்பியவாறும், அதனை பிரதிபலிக்கும் பதாகைகளினையும் ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவம் சட்டத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையினையும் அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

சட்டத்தரணிகள் தங்களது தொழில்பணிகளினை அச்சமின்றி மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கல்முனை கிளையின் தலைவி, சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் இதன்போது வலியுறுத்தினார்.

“ஒரு சட்டத்தரணி மீது நடத்தப்படும் தாக்குதல், முழு நீதித்துறையின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும் எனவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அரசினுடைய பொறுப்பாகும். குற்றவாளிகளைளினை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்துவதற்கான துரிதமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகள் அவசியம்,” என்றும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களான சட்டத்தரணிகள், இன்று (பெப்ரவரி 16) நாடு முழுவதும் எந்தவொரு வழக்குகளுக்காகவும் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் இருக்க தீர்மானித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த தீர்மானம் கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதோடு, சட்டத்துறையின் பாதுகாப்பும் சுயாதீனத்தன்மையும் குறித்து எழுந்துள்ள அச்சங்களினை வெளிப்படுத்தும் நோக்கில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now