New Updates! Fresh news just arrived.

மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி வெடித்த போராட்டம்! -...

News

மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி வெடித்த போராட்டம்!

September 11, 2026 9:58 am
மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி வெடித்த போராட்டம்!
யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்துத்துறை பகுதியில இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தபாலகத்திற்கு சொந்தமான காணி, நீதிமன்றத்திற்கு சொந்தமான காணி, பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான காணி மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை விடுவிக்குமாறுகோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவம் மற்றும் கடற்கரை வெளியேற வேண்டும் என்று கோரி நகர சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் பருத்தித்துறை துறைமுக பகுதியில் இருந்து ஆரம்பமாகி வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றது. அங்கு, மேற்குறித்த காணிகளை விடுவிக்குமாறு பிரதேச செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், நகர சபையை தவிசாளர் வின்சன் டி போல் டக்லஸ் போல், பருத்துத்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ், அரசியல், செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பருத்தித்துறை வர்த்தகர்கள், பிரதேச மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now