New Updates! Fresh news just arrived.

டெங்கு பரவல் தீவிரம் அடைகிறது – சுகாதார துறையின் அவசர அறி...

News

டெங்கு பரவல் தீவிரம் அடைகிறது – சுகாதார துறையின் அவசர அறிவிப்பு

June 30, 2026 1:22 pm
டெங்கு பரவல் தீவிரம் அடைகிறது – சுகாதார துறையின் அவசர அறிவிப்பு
இலங்கையில் டெங்கு நோய்த்தொற்று தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,189 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, டெங்கு காரணமாக இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்ததாவது, நாளொன்றுக்கு சுமார் 950 முதல் 1,000 வரை புதிய நோயாளர்கள் பதிவாகி வருவதாகும். கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 1,030 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், 11,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து கம்பஹாவில் 10,662 பேர், மாத்தறையில் 3,921 பேர், களுத்துறையில் 3,600 பேர் மற்றும் இரத்தினபுரியில் 3,279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் 124 வலயங்கள் அதிக அவதானமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடுத்த மூன்று நாட்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இதற்கு பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் எனவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now