New Updates! Fresh news just arrived.

டெங்கு பரவல் தீவிரம்; முக்கிய வைத்தியசாலைகளில் இட நெருக்க...

News

டெங்கு பரவல் தீவிரம்; முக்கிய வைத்தியசாலைகளில் இட நெருக்கடி – சுகாதாரத் துறை எச்சரிக்கை

June 16, 2026 11:42 am
டெங்கு பரவல் தீவிரம்; முக்கிய வைத்தியசாலைகளில் இட நெருக்கடி – சுகாதாரத் துறை எச்சரிக்கை
டெங்கு நோயின் பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஐடிஎச், ராகம மற்றும் களுபோவில வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போதைய நிலைமை மிகவும் பாரதூரமானதாக உள்ளது என்றும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனால் முன்னணி வைத்தியசாலைகளுக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு நோயாளிகள் அதிகரிப்பால் வைத்தியசாலை பராமரிப்பு செலவுகள் அரசாங்கத்திற்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சூழ்நிலையில், டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்றிலிருந்து (15) எதிர்வரும் 20ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை 41,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 24 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் நான்கு பேர் பாடசாலை மாணவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 89க்கும் அதிகமான வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் டெங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now