New Updates! Fresh news just arrived.

“டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி”

News

“டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி”

August 9, 2026 1:03 pm
“டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி”
டெங்கு நோயற்ற, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தின்” அம்பாறை மாவட்ட இறுதி நாள் நிகழ்வு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் பி.பசூர்கான் ஏற்பாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான முஷர்ரஃப் முத்துநபீன் தலைமையில் இன்று(09) பொத்துவில் வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் சட்ட முதுமானி கௌரவ அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம்(பா.உ) கலந்து கொண்டதுடன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாஷித், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் , கட்சியின் பிரதித் தலைவருமான பைசால் காசிம், கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரருமான எம்.ஐ.எம்.மன்சூர், கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், கட்சியின் அம்பாரை மாவட்டச் செயலாளர் ஏ.சீ.சமால்டீன், செயற்றிட்ட முகாமையாளர் எம்.ஐ.ஸாஹிர், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எப்.உவைஸ், பொத்துவில் பிரதேச செயலாளர் ஏ.சி.நசீல், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் எம்.முஸ்மி, பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் அலியார் மாபீர் , உறுப்பினர்களான ஜெம்சித் ராபி, இஜாஸ் அகமட், யாசீன் கியாத், ரிழ்வான், சபூரா உம்மா, முஹஜ்ஜிதா,குரைசியா, முபீதா, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எல்.ரினாஸ், எஸ்.எம்.ரியாஸ், அஸ்வர் சாலி, ஏ.சி.நியாஸ், ஏ.எல்.பாயிஸ் (உதவிக் கல்விப் பணிப்பாளர்) இறக்காமம் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.என்.நாசர், எஸ்.எல்.எம்.றஜா, என்.எம்.ஆஷிக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான ஓய்வுபெற்ற ஆசிரியரும், முன்னாள் உப தவிசாளருமான ஏ.பி.பதுர்கான், சட்டத்தரணி பைசால் முகைதீன், ஓய்வு பெற்ற சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மலீக், பொத்துவில் சுகாதார பரிசோதகர்கள், தொழிலதிபர் ஏ.கே.அமீர், படையினர், பிரதேச சபை ஊழியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

கே எ. ஹமிட்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now