பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க விவசாயத் திணைக்களம் பு...
News
பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க விவசாயத் திணைக்களம் புதிய திட்டம்
இலங்கையின் பெரிய வெங்காய நுகர்வுத் தேவையில் பாதியளவை உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரவுள்ள சிறுபோக அறுவடையைப் பயன்படுத்தி, நாட்டின் வருடாந்த தேவையில் 50 சதவீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்வதே திட்டத்தின் முக்கிய இலக்காக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் ஆண்டுக்கு சுமார் 320,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் தேவைப்படுகின்றது.
2014ஆம் ஆண்டு நாட்டில் பெரிய வெங்காய உற்பத்தி அதிகளவில் பதிவாகியிருந்தது. அப்போது சுமார் 6,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு 100,000 மெட்ரிக் தொன் அறுவடை செய்யப்பட்டிருந்தது.
எனினும், உற்பத்திச் செலவுகள் அதிகரித்தமை மற்றும் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்துடன் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டமை உள்ளிட்ட காரணங்களால் பல விவசாயிகள் இப்பயிர்ச்செய்கையிலிருந்து விலகியுள்ளனர்.
இதனை மாற்றும் நோக்கில் விவசாயிகளை மீண்டும் பெரிய வெங்காயப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, குறைந்த செலவில் அதிக விளைச்சலைப் பெறும் முறைகள் தொடர்பில் விவசாயிகளுக்கு பயிற்சிகளும் விழிப்புணர்வும் வழங்கப்படவுள்ளன.
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு ஏக்கரில் கிடைக்கும் விளைச்சலை அதிகரிக்க முடியும் என விவசாயத் திணைக்களத்தின் திட்டமிடல் மற்றும் பயிற்சி பணிப்பாளர் பி. சிசிர குமார தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் எதிர்வரும் சிறுபோக அறுவடையில் எதிர்பார்க்கப்படும் உற்பத்தி இலக்கை அடைய முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.