வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள மேலதிக வரி தொடர்பில்...
News
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள மேலதிக வரி தொடர்பில் விளக்கம்!
வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி தொடர்பில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ விசேட விளக்கமளித்துள்ளார்.
இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் இறக்குமதிச் செலவுகள் வேகமாக அதிகரித்திருப்பதாகவும், அதற்கமைய நாட்டில் உள்ள கையிருப்புகளினை முகாமை செய்வதற்காக 3 மாத காலத்திற்கு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அங்கு தெரிவித்தார்.
இருப்பினும், இதன் ஊடாக வாகன இறக்குமதி தடை செய்யப்படவோ அல்லது கட்டுப்படுத்தப்படவோ இல்லை என கூறிய பிரதி அமைச்சர், குறித்த நடவடிக்கை மூன்று மாத காலத்திற்கு மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என்றும், எவரேனும் இந்த நேரத்தில் வாகனத்தைதினை இறக்குமதி செய்ய விரும்பினால் அவர் அந்த கூடுதல் வரிக்குட்பட நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, குறித்த நடவடிக்கை 3 மாத காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதால், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களினை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"கடந்த இரண்டு மாதங்களில் இறக்குமதிக்கான செலவு 2 பில்லியன் டொலர்களுக்கும் மேல் அதிகரித்துள்ளமை நமக்கு ஒரு சவாலாகவுள்ளது. கடந்த காலத்தில் வாகன இறக்குமதிக் செய்வதற்கான கடன் கடிதங்களும் மிக வேகமாக திறக்கப்பட்டன. ஆகவே நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம்.
குறித்த முடிவின் ஊடாக, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களினை இறக்குமதி செய்யும் போது, 3 மாத காலத்திற்கு நாங்கள் வரியை அதிகரிக்கின்றோம்.
இதன் நோக்கம் என்னவென்றால், குறித்த 3 மாத காலத்திற்குள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களினை உங்களால் முடிந்தால் தாமதப்படுத்துங்கள் என்னும் செய்தியை வழங்குவதே ஆகும். விலையினை அதிகரிப்பது இதன் நோக்கமல்ல.
நாங்கள் தடை செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அவசியமான ஒருவரினால் கூட வாகனத்தினை இறக்குமதி செய்ய முடியாமல் போயிருக்கும். நாங்கள் விதித்தது என்னவென்றால், வாகன இறக்குமதியின் போது விதிக்கப்படும் சுங்கத் தீர்வை வரி 30% சதவீதமாகும். அந்த 30% இல் 50% என்பது, 15% மட்டுமே அதிகரிக்கின்றது.
வாகனங்களினுடைய விலை 50% சதவீதத்தால் அதிகரிக்கும் என கூறுவது முற்றிலும் கட்டுக்கதையாகும். அப்படி நடக்காது. அதிகரித்தாலும் 15% மட்டுமே அதிகரிக்கும். குறித்த அதிகரிப்பு, தங்களது நுகர்வை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க முடியாதவர்களுக்கு மட்டுமே செலுத்த வேண்டியதாக இருக்கும். இது ஒட்டுமொத்தமாக சந்தை விலையினை பாதிக்காது" எனவும் தெரிவித்துள்ளார்.