New Updates! Fresh news just arrived.

தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது: விசாரணைகள் நிறைவு! - G...

News

தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது: விசாரணைகள் நிறைவு!

February 12, 2026 2:45 pm
தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது: விசாரணைகள் நிறைவு!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினுடைய நியமனத்தினை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையினை நிறைவு செய்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று (12) தீர்மானித்துள்ளது.

குறித்த வழக்குகளுடன் தொடர்புடையதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சத்தியக்கடதாசியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களினை அடிப்படையாகக் கொண்டும், மனுதாரர் தரப்பின் இணக்கத்தோடு, மனு மீதான விசாரணையினை முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now