அக்குறணை விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள்
News

நேற்று (19) கண்டி - மாத்தளை A-9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் அக்குரணை 7 ஆம் கட்டை குருகொட சந்தியில் உயிரிழந்த நால்வரின் அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அலவத்துகொட பகுதியில் இருந்து கண்டி திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சீமெந்து தூள் ஏற்றிய வாகனம் (Bulker), சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பல வாகனங்களுடன் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இவ் விபத்தில் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவரும், அக்குறணை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண், அத்தோடு மாத்தளை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய யுவதி மற்றும் அக்குறணை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஆகிய நால்வருமே உயிரிழந்துள்ளனர்.
மேலும் இவ் விபத்தில் காயமடைந்த 6 பேர் கண்டி மற்றும் அக்குறணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைகள் கண்டி வைத்தியசாலையில் நடாத்தப்பட்டு, சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விபத்துடன் தொடர்புடைய கல்கமுவை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சீமெந்து வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் இன்று (20) கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இவ் விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் நிஹால் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூவரின் நிலை ஆபத்தில் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி தேசிய வைத்தியசாலையில்
காயமடைந்தவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமது வாகனம் பிரேக் செயலிழந்து தனது கட்டுப்பாட்டை இழந்தமையினாலே இந்த விபத்து நேர்ந்ததாக, கைதான சாரதி தெரிவித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்.
முதலில் குறித்த வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றையே மோதியுள்ளதோடு, குறித்த மோட்டார் சைக்கிள் சுமார் 160 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும் 4 முச்சக்கரவண்டிகள், 2 டிப்பர்களீடன் சேர்த்து மொத்தமாக எட்டு வாகனங்களுடன் இந்த சீமெந்து ஏற்றிய வாகனம் மோதியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் இருந்து சந்தேகநபரான சாரதி சீமெந்து ஏற்றி வந்துள்ளதாகவும், அவர் விபத்தின்போது மதுபோதையில் இருக்கவில்லை என்பதும் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இந்த விபத்து நேர்ந்ததா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.