New Updates! Fresh news just arrived.

தடுத்து வைக்கும் காலம் 48 மணிநேரமாக குறைக்கப்படும்: சட்டம...

News

தடுத்து வைக்கும் காலம் 48 மணிநேரமாக குறைக்கப்படும்: சட்டமா அதிபர் அறிவிப்பு!

November 9, 2026 7:15 pm
தடுத்து வைக்கும் காலம் 48 மணிநேரமாக குறைக்கப்படும்: சட்டமா அதிபர் அறிவிப்பு!
உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரைத் தடுத்து வைக்கும் கால எல்லையை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைத்து சட்டமூலத்தில் திருத்தம் செய்யவுள்ளதாகச் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இத்தகவலை நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டிருந்த 'பச்சை குத்துதல்' (Tattoos) மற்றும் 'அடையாளங்கள்' தொடர்பான ஏற்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகச் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, தீவிர குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் எந்தவொரு தகவலையும் அல்லது விடயத்தையும் ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர், உரிய நீதிமன்றத்தின் முன்அனுமதியைப் பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சட்டப்பிரிவையும் நீக்கவுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்த அறிவிப்பை நீதிமன்றத்தில் விடுத்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now