New Updates! Fresh news just arrived.

சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச...

News

சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

March 1, 2026 2:02 am
சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார்:  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் தெஹ்ரான் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

எனினும், அவர் யாரை குறிப்பிடுகின்றார் என்பது தொடர்பில் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இன்றைய தினம் உயர்மட்டத் தலைவரிடம் இருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அவர் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்பது தொடர்ப்பில் இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தேவையான காலம் வரை தொடரும் என குறிப்பிட்ட இஸ்ரேலியப் பிரதமர், இஸ்ரேலின் முன்னணி கட்டளைப்பிரிவு வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களினை பின்பற்றுமாறு இஸ்ரேலிய குடிமக்களைக் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரான் மக்களுக்கு உரையாற்றிய நெதன்யாகு, குறித்த தாக்குதல்கள் அவர்கள் தாம் அனுபவித்து வரும் கொடுங்கோன்மையில் இருந்து தங்களினை விடுவித்துக்கொள்ள உதவும் என குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அவர்களுக்கு ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாக இது அமைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்திரளாகத் வீதிகளில் இறங்கி குறித்த பணியை முடித்துவிடுங்கள் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு, நீங்கள் ஒன்றிணைவதற்கு இதுவே சரியான நேரம் எனவும், ஒரு வரலாற்றுப் பணிக்காக ஒன்றுபடுங்கள் என்றும் அவர் தமது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தலைவர் உயிருடன் இருப்பதாகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now