New Updates! Fresh news just arrived.

பிரஜா சக்தி வேலைத்திட்டத்திற்கு டிஜிட்டல் தரவு அமைப்பு - ...

News

பிரஜா சக்தி வேலைத்திட்டத்திற்கு டிஜிட்டல் தரவு அமைப்பு

October 14, 2026 9:41 am
பிரஜா சக்தி வேலைத்திட்டத்திற்கு டிஜிட்டல் தரவு அமைப்பு
அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான வறுமையை ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘பிரஜா சக்தி’ தேசிய வேலைத்திட்டத்திற்காக ஒருகிணைந்த டிஜிட்டல் தரவு அமைப்பொன்றை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் நேற்று (13) அந்த அமைச்சின் வளாகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

பிரஜா சக்தி தேசிய செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் கீழ் இயங்கும் கிராம அபிவிருத்திப் பணியகம், கிராம அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

கிராமப்புற வறுமையை ஒழிக்கும் செயற்திட்டத்தில் அபிவிருத்தித் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளைக் கண்டறிவதற்குத் தேவையான தரவுகளை ஒரே டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராமப்புற அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதற்கு இந்தத் தரவு அமைப்பைப் பயன்படுத்தக்கூடிய முறைமைகள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now