New Updates! Fresh news just arrived.

அரச அலுவலகங்களில் டிஜிட்டல் பயன்பாடு: வழிகாட்டல் வெளியீட...

News

அரச அலுவலகங்களில் டிஜிட்டல் பயன்பாடு: வழிகாட்டல் வெளியீடு!

April 27, 2026 2:39 pm
அரச அலுவலகங்களில் டிஜிட்டல் பயன்பாடு:  வழிகாட்டல் வெளியீடு!
அரச சேவைகளைத் தொலைதூரத்திலிருந்து வழங்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களினை சிறந்த முறையில் பயன்படுத்துவது தொடர்பில் நிறுவனத் தலைவர்களுக்கு வழிகாட்டுதல்களினை வெளியிடுவதற்கு டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாக அமைச்சுக்கள் இணைந்து நடவடிக்கை எடுத்திருக்கின்றன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும்எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த எரிசக்தி முகாமைத்துவத் தேவைகள் காரணமாக, தேசிய எரிபொருள் கையிருப்பின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக அலுவலக சேவைகளினை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்க அரசாங்கம் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினுடைய தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அரச சேவையை முறையாகப் பேணிச் செல்வது குறித்து அமைச்சரவைக் குழுவின் உத்தரவின் பேரில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் கலந்துரையாடி, முடிந்தவரைக்கும் தொலைதூரச் சேவை முறைக்கு மாறுவதற்கான சாத்தியக்கூறுகளினை ஆராயுமாறு டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தொலைதூரத்திலிருந்து சேவைகளினை வழங்குவதற்கும், சாதாரண அலுவலகப் பணிகளுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களினை சிறந்த முறையில் பயன்படுத்துவது குறித்தான பரிந்துரைகளினை அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் வழங்குவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சால் இடைக்கால வழிகாட்டல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த வழிகாட்டல்கள் மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றை https://mode.gov.lk/docs/guidelines என்ற இணைப்பின் ஊடாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now