பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெற்றுள்ள மாணவர்கள் குறித்து ...
News
பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெற்றுள்ள மாணவர்கள் குறித்து வெளியான அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 176,527 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பரீட்சைக்கு ஒட்டுமொத்தமாக 281,810 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 176,527 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.
பரீட்சை மோசடிகள் அல்லது ஏனைய காரணங்களுக்காக 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பெறுபேறுகள் தொடர்பாகத் திருப்தியடையாத மாணவர்கள், தமது விடைத்தாள்களை மறுசீராய்வு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் 06 ஆம் திகதி முதல் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை இணையத்தளம் (Online) ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் எனப் பரீட்சைத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.