பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் கலந்துரையாடல்!
News

பெண்கள் தொடர்பிலான தேசிய ஆணைக்குழுவினுடைய கலந்துரையாடல் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினுடைய தலைவரும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமாகிய சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் ஜனாதிபதியினுடைய செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தலைமையில் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி செயலகத்தால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவினுடைய தற்போதைய பௌதிக ரீதியான பிரச்சினைகளினை தீர்ப்பது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதோடு, இதன்போது ஆணைக்குழு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினுடைய இணைப் பிரதித் தலைவர்களாகிய சமிந்த்ராணி கிரியெல்ல, சமன்மலி குணசிங்க மற்றும் ஒன்றியத்தினுடைய ஏனைய உறுப்பினர்களான ஹேமாலி வீரசேகர, லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் நிலந்தி கொட்டஹச்சி, ஒஷானி உமங்கா ஆகியோர் பங்கேற்றதோடு, ஒன்றியத்தின் செயலாளர், இலங்கை பாராளுமன்றத்தினுடைய செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவினுடைய ஆணையாளர்கள், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினுடைய செயலாளர் உட்பட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலகம், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தேசிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.