யாழ் மற்றும் கிளிநொச்சியில் படையினரின் வசமுள்ள காணிகளினை ...
News
யாழ் மற்றும் கிளிநொச்சியில் படையினரின் வசமுள்ள காணிகளினை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளினுடைய புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பானது இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்படி, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளினுடைய கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளினைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரினை இன்று சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் காணிகளினை விடுவிப்பது தொடர்பாகவும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி விடுவிப்புக்களினுடைய முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள விவசாயப் பண்ணைகளினை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் மற்றும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் தரப்பினரால் நிர்வகிக்கப்படுகின்ற வர்த்தக நிலையங்கள் தொடர்பில் ஆளுநரால் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், பாதுகாப்புத் தரப்பினர் கடந்த காலங்களில் வழங்கிய ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
பு.கஜிந்தன்