New Updates! Fresh news just arrived.

ஆசிரியர் - அதிபர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து கலந்துர...

News

ஆசிரியர் - அதிபர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

November 18, 2026 5:45 am
ஆசிரியர் - அதிபர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்குப் பதவியுயர்வு பெறும் போது ஏற்படும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பில், கல்வி, மனிதவளம் மற்றும் மனித மூலதனம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட உப குழுவில் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

உப குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் குறித்த உப குழு அண்மையில் கூடியபோதே இந்த முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.

இந்தக் கூட்டத்திற்காகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றைச் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆசிரியர் சேவையில் உள்ள உத்தியோகத்தர்கள் அதிபர் சேவைக்கு நியமனம் பெறும் போது ஏற்படும் ஊதிய முரண்பாடுகள் மற்றும் இடைவெளிகள் குறித்து இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

தனிப்பட்ட ஒரு சேவைக்கு மட்டும் தனித்தனியாக ஊதியச் சீரமைப்புக்களை மேற்கொள்ளும்போது, அது ஒட்டுமொத்த அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் ஒப்பிடுகையில் பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்ற கருத்து இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

சேவைக் பிரமாணக் குறிப்பு மற்றும் ஆட்சேர்ப்பு வயது எல்லைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், அதிபர்களுக்கான சிறப்புக் சலுகைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள், பாடசாலைகளை வகைப்படுத்தல் மற்றும் வெற்றிடங்களை நிரப்புதல், முறையான இடமாற்றக் கொள்கை, ஆசிரியர் மற்றும் அதிபர் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து உப குழு அதிகாரிகளுடன் ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக கலந்தாய்வுகளை நடத்தியதன் பின்னர், உரிய பரிந்துரைகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையைத் துறைசார் கண்காணிப்புக் குழுவுக்குச் சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now