அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தி உறவுகளை ...
News
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தி உறவுகளை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்!
எரிசக்தி உறவுகளை மேம்படுத்துவது குறித்து அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜேன் ஹோவெல் ஆகியோருக்கும் இடையே எரிசக்தி அமைச்சில் கலந்துரையாடல் நடைபெற்றதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் எரிசக்தி துறையில் நடைபெற்று வரும் நேர்மறையான மாற்றங்கள் குறித்து தனது நாட்டின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதர் தெரிவித்தார்.
நாட்டில் எரிசக்தி மற்றும் மின்சாரத் துறைகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விரிவாகப் பேசிய எரிசக்தி அமைச்சர், அமெரிக்க முதலீடு மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பெற எதிர்பார்க்கும் துறைகள் மற்றும் உருவாகி வரும் புதிய வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்.
மின் மறுசீரமைப்பு திட்டம் மற்றும் பெட்ரோலியத் துறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தபட்டுள்ளது.