பேருந்தைச் செலுத்தும்போது கைபேசியை பயன்படுத்திய சாரதி பணி...
News
பேருந்தைச் செலுத்தும்போது கைபேசியை பயன்படுத்திய சாரதி பணி நீக்கம்!
பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளினை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தினை செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவரை சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, பாடசாலை மாணவர்களினை ஏற்றாமல் சென்ற மற்றொரு பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினுடைய தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 25.01.2026 அன்று காலை 9.45 மணியளவில் மன்னாரில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்தினுடைய சாரதி, தனங்கிளப்பு வரையிலான பயணத்தின்போது, வீதிப் பாதுகாப்பு மற்றும் சேவை விதிமுறைகளினை மீறி, கைப்பேசியில் உரையாடியவாறு பேருந்தினை செலுத்தியமை தொடர்பில் காணொளி ஆதாரங்களோடு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பேருந்துச் சாரதியினை மறு அறிவித்தல் வரும் வரைக்கும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 23.01.2026 அன்று மதியம் 1.40 மணியளவில், மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்களினை ஏற்றாமல் சென்ற தனியார் பேருந்துகுறித்து, பாடசாலை நிர்வாகத்தினால் அதிகார சபைக்கு எழுத்துமூலமாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரினை விசாரணைக்கு அழைக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டதோடு, அவர்களுக்கு உத்தியோகபூர்வமான கடும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுப் போக்குவரத்துச் சேவைகளினுடைய தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில், இவ்வாறான விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் ஆதாரங்களுடன் முறைப்பாடுகளினை முன்வைக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகத் தயங்காமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகார சபையினுடைய தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பு.கஜிந்தன்