New Updates! Fresh news just arrived.

உயர்தர பரீட்சை குறித்து எழுந்துள்ள சர்ச்சை; கல்வி அமைச்சி...

News

உயர்தர பரீட்சை குறித்து எழுந்துள்ள சர்ச்சை; கல்வி அமைச்சிடம் முக்கிய கோரிக்கை!

June 17, 2026 12:53 pm
உயர்தர பரீட்சை குறித்து எழுந்துள்ள சர்ச்சை; கல்வி அமைச்சிடம் முக்கிய கோரிக்கை!
எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும், மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும் போதிய தயாரிப்பு கால அவகாசம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் விகிதம் குறைவாக உள்ள நிலையில், உயர்தரப் பரீட்சை கடுமையான போட்டித் தன்மையை கொண்டதாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் மாணவர்கள் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

2026 மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை நிறைவு செய்யவும், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் சுயக் கற்றலுக்கான போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், டித்வா சூறாவளி பாதிப்பால் பல மாணவர்கள் தங்களது பாடக்குறிப்புகளை இழந்துள்ளதாகவும், பரீட்சை முடிவுகள் தாமதமாக வெளியானதால் தயாரிப்பு காலம் மேலும் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, கல்வி அமைச்சு இந்த விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து பரீட்சை அட்டவணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now