ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மாநா...
News
ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மாநாடு!
வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தனிப்பட்ட நிதி ஒதுக்கீடு திட்டமிடப்பட்டுள்ளது என்றும், அதன் மூலம் மாவட்ட ஒருங்கமைப்புக் குழுக் கூட்டங்களில் எழும் அவசரகால பாலம், சாலை அல்லது கட்டிடப் புனரமைப்புப் பணிகளை மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெறும் வரை தாமதமின்றி மாவட்டச் செயலாளர்களே நேரடியாக மேற்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இன்று காலை (09) கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மாநாட்டில் பங்கேற்றபோது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
பொதுச் சேவைகளை மேலும் திறமையாகவும் திறம்படவும் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதும், மாவட்ட அளவில் நிலவும் பிரச்சனைகளை விவாதித்து தகுந்த தீர்வுகளைப் பெறுவதன் மூலம் மாவட்ட அளவில் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிப்பதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.