கடலுக்கு செல்ல வேண்டாம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை
News

மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதியில் தற்போது நிலவும் வானிலை காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வது பாதுகாப்பானதல்ல என மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நேற்று (06) வெளியிடப்பட்ட பலத்த காற்று தொடர்பான அபாய எச்சரிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை குறித்த கடற்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வேறு பகுதிகளில் இருந்து கடலுக்குச் செல்லும் மீன்பிடிப் படகுகளும் மாத்தறை முதல் பொத்துவில் வரையான அபாயகரமான கடற்பரப்புக்குள் பிரவேசிக்காமல் இருப்பதுடன், அப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடல் மற்றும் வானிலை நிலவரம் தொடர்பில் அதிகாரிகளால் வெளியிடப்படும் புதிய அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்படுமாறும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் மீனவர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.