பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்கக் கூடாது – கோரிக்கை! -...
News
பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்கக் கூடாது – கோரிக்கை!
2021ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட பாம் எண்ணெய் இறக்குமதித் தடையை நீக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
தடையை நீக்க வேண்டாம் எனக் கோரி, அதன் தலைவர் ரஞ்சித் விதானகே நேற்று (02) வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.
பாம் எண்ணெய் இறக்குமதி தொடர்பான நடவடிக்கைகளின் பின்னணியில் மோசடி வர்த்தகர்கள் மற்றும் ஊழல் அதிகாரிகள் செயற்படுவதாக ரஞ்சித் விதானகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இறக்குமதித் தடையை தொடர்ந்து அமுலில் வைத்திருக்க வேண்டும் என அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.