New Updates! Fresh news just arrived.

கிழக்கின் மருத்துவர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் - Gur...

News

கிழக்கின் மருத்துவர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில்

January 19, 2026 7:29 am
கிழக்கின் மருத்துவர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில்
அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (19) வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.

வைத்திய அத்தியட்சகரின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், அந்த விசாரணை சுதந்திரமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த, குறித்த அதிகாரியை பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த வாரம் இதே கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

எனினும், வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் சுகாதார அமைச்சு எவ்வித சாதகமான பதிலையும் வழங்காத காரணத்தினால், இன்று காலை முதல் போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலை 08.00 மணி முதல் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பமாகவுள்ளது.

வேலைநிறுத்தம் இடம்பெற்றாலும், அவசர விபத்துக்கள் மற்றும் உயிராபத்து நிலையில் உள்ள நோயாளர்களுக்கான அவசர சிகிச்சை சேவைகள் மனிதாபிமான அடிப்படையில் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now