டொலர் மோசடி: கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!
News

இறக்குமதி செய்வதாக கூறி பல பில்லியன் அமெரிக்க டொலர்களினை வெளிநாட்டு வங்கிகணக்குகளுக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாக வெல்லம்பிட்டியவில் நேற்று கைதாகிய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, குறித்த சந்தேகநபரை எதிர்வருகின்ற 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றமானது இன்று (8) உத்தரவிட்டுள்ளது.
பொருட்களை இறக்குமதி செய்யாமல் போலி நிறுவனங்களின் ஊடாக 25 மில்லியன் அமெரிக்க டொலரை ( 7.5 பில்லியன் ரூபாவை) வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்த சந்தேகநபரினை நிதி மோசடி விசாரணை பிரிவு (FCID) நேற்று கைது செய்தது.
வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான சந்தேகநபர், வர்த்தக வங்கிகளின் ஊடாக 'TT' (Telegraphic Transfers) முறைமையினை பயன்படுத்தி இப் பெருந்தொகையினை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், உள்நாட்டில் 6 நிறுவனங்களினுடைய பெயர்களில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பொருட்களினை முன்பதிவு செய்வதாகக் காண்பித்துச் சந்தேகநபர் குறித்த நிதி மோசடியைச் செய்துள்ளார்.
2024 ஜனவரி தொடக்கம் 2025 ஜூலை வரையிலான காலப்பகுதியில் குறித்த நிதி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும், குறித்த பரிவர்த்தனைகளுக்குரிய எந்தவிதமான பொருட்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதானது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.