New Updates! Fresh news just arrived.

ஈரானிய கப்பல் விவகாரத்தில் இராணுவத்தை சாடியுள்ள டொனால்ட் ...

News

ஈரானிய கப்பல் விவகாரத்தில் இராணுவத்தை சாடியுள்ள டொனால்ட் டிரம்ப்!

March 12, 2026 8:37 am
ஈரானிய கப்பல் விவகாரத்தில் இராணுவத்தை சாடியுள்ள டொனால்ட் டிரம்ப்!
இலங்கை கடற்கரைக்கு அப்பால் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவு குறித்து தான் கேள்வி எழுப்பியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கென்டக்கி மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணி ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி டிரம்ப், குறித்த கப்பலைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக அதனை ஏன் அழித்தீர்கள் என்று தான் இராணுவ அதிகாரிகளிடம் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"நாம் ஏன் அவர்களைக் கொன்றோம்? அவர்களைக் கைது செய்து நமது கடற்படையில் சேர்த்திருக்க முடியாதா?" என தான் அதிகாரிகளிடம் கேட்டதாக அவர் அங்கு தெரிவித்துள்ளதாக என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

கப்பலைக் கைப்பற்றுவதை விட அதனை மூழ்கடிப்பதே சிறந்தது என்று தனது ஜெனரல் ஒருவர் தன்னிடம் கூறியதாகவும், அவர் அதனை "ஐயா, அதுதான் அதிக வினோதமானது" என்று விவரித்ததாகவும் டிரம்ப் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் நடத்தப்பட்ட டார்பிடோ (Torpedo) தாக்குதலில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'Frigate' ரகத்தைச் சேர்ந்த IRIS Dena என்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 104 கடற்படையினர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now