New Updates! Fresh news just arrived.

நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதல்கள் ...

News

நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படும்: ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

April 18, 2026 5:15 pm
நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படும்: ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தத்தின் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதலானது நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள போர்நிறுத்தமானது அடுத்த வாரம் முடிவடையவுள்ளது.

அதனை நீடிக்காவிட்டால் மீண்டும் போர்ச் சூழல் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எனினும் வெற்றிகரமான ஒப்பந்தம் ஒன்றினை எட்ட முடியும் என தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் ஈரானினுடை முயற்சிக்கு அதிபர் ட்ரம்ப் தனது கடும் எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now