New Updates! Fresh news just arrived.

ஐக்கிய இராச்சிய பிரஜை ஒருவரினால் ‘Rebuilding Sri Lanka’ ந...

News

ஐக்கிய இராச்சிய பிரஜை ஒருவரினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு விசேட நிதி நன்கொடை!

January 15, 2026 3:22 pm
ஐக்கிய இராச்சிய பிரஜை ஒருவரினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு விசேட நிதி நன்கொடை!
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தினுடைய ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு அருகில் வசிக்கும் ரிச்சர்ட் வுட் தம்பதியினரால் 2,000 ஸ்டேர்லிங் பவுண் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

குறித்த நன்கொடை பற்றித் தெரிவித்து, ரிச்சர்ட் வுட் தம்பதியினரால், ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் நிமல் சேனாதீரவிடம், அதற்கான பற்றுச்சீட்டோடு கூடிய கடிதத்தினை ஒப்படைத்துள்ளனர்.

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் குறித்த நிதி நன்கொடை வழங்கப்பட்டதாகவும், கடந்த நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் மூன்று வாரங்கள் இலங்கையில் பயணம் செய்த தமக்கு, நாட்டினுடைய இயற்கை அழகு, சுவையான உணவுகள் மற்றும் மக்களினுடைய உயர்ந்த மனித குணங்கள் குறித்து நல்லெண்ணம் ஏற்பட்டதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களுக்கு மத்தியிலும், நாடு வலுவாக மீண்டெழுந்து வருவதை காண முடிந்ததாகவும், எதிர்காலத்தில் தமக்கு மிக அண்மையில் உள்ள ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துடன் நல்லுறவைப் பேண எதிர்பார்த்துள்ளதோடு, இலங்கையின் தேசிய தினத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now