பெற்றோர்களுக்குச் சுமை ஏற்படுத்த வேண்டாம் - கல்வி அமைச்சு...
News
பெற்றோர்களுக்குச் சுமை ஏற்படுத்த வேண்டாம் - கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு கண்டிப்பான உத்தரவு
பாடசாலை விழாக்கள் மற்றும் நினைவுக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும்போது செலவுகளைக் குறைக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தலொன்றை வெளியிட்டுள்ளது.
முந்தைய சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், சில பாடசாலைகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்காகத் தொடர்ந்து அதிகமாகச் செலவு செய்து, பெற்றோர்களுக்குத் தேவையற்ற நிதிச் சுமையை ஏற்படுத்துவதாக இன்று வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது
எதிர்கால நிகழ்வுகள் குறைந்தபட்ச செலவில், எளிமையான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும், பெற்றோர்கள் கூடுதல் செலவுகளை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
மேலும், பாடசாலை நிதி மமுகாமைத்துவம் குறித்த சுற்றறிக்கை 54/2023 மற்றும் பிற தொடர்புடைய நிதி விதிமுறைகளை பாடசாலை நிர்வாகங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கல்வி அமைச்சு நினைவூட்டியுள்ளது.