New Updates! Fresh news just arrived.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்து வெளி...

News

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்து வெளியேறினார் வைத்தியர் ருக்ஷான் பெல்லன!

January 27, 2026 1:38 pm
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்து வெளியேறினார் வைத்தியர் ருக்ஷான் பெல்லன!
வாக்குமூலதினை வழங்குவதற்காக இன்று (27) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்த வைத்தியர் ருக்ஷான் பெல்லன தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதன்படி, கொலை மிரட்டல் சம்பவம் குறித்து தன்னிடம் வாக்குமூலம் பெறுவதற்காக விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலுக்கு அமையவே, தான் இவ்வாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னிலையானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையினுடைய பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவினுடைய பணி அண்மையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பொறுப்புவாய்ந்த அரசாங்க வைத்திய அதிகாரி என்கின்ற வகையில், உரிய அனுமதியின்றி ஊடகங்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களைளினை தெரிவித்தமை மற்றும் பொதுமக்களிடையே அமைதியின்மையினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை குறித்து சுகாதார அமைச்சு முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே அவருக்கு எதிராக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்ற விடயம் குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now