New Updates! Fresh news just arrived.

கள்ள மணல் ஏற்றிச் சென்ற டிப்பருடன் சாரதி கைது: சுன்னாகம் ...

News

கள்ள மணல் ஏற்றிச் சென்ற டிப்பருடன் சாரதி கைது: சுன்னாகம் பொலிஸார் அதிரடி!

September 25, 2026 11:00 pm
கள்ள மணல் ஏற்றிச் சென்ற டிப்பருடன் சாரதி கைது: சுன்னாகம் பொலிஸார் அதிரடி!
கள்ள மணல் ஏற்றிச் சென்ற மூன்று டிப்பர்கள் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்ற நிலையில் இன்று ஒரு டிப்பரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டன.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 19ஆம் திகதி மூன்று டிப்பர்கள் மணல் ஏற்றியவாறு மயிலங்காடு - புன்னாலைக்கட்டுவன் வீதியால் சென்றவேளை தெல்லிப்பழை சந்தியில் வைத்து பொலிஸார் அவற்றை வழிமறிக்க முயன்றனர்.

இருப்பினும் அந்த மூன்று டிப்பர்களுக்கும் முன்னால் வந்த மோட்டார் சைக்கிள்கள் வழியை சீர் செய்து கொடுக்க மணலை வீதியில் கொட்டிவிட்டு தப்பி சென்றன. இருப்பினும் விடாது தொடர்ந்த பொலிஸார் வீதி போக்குவரத்து பொலிசாரை பல இடங்களில் கடமையில் அமர்த்தி குறித்த டிப்பர்களை வழிமறித்த போதும் அவை தப்பிச் சென்றன.

இந்நிலையில் இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொறுப்பதிகாரி நிதர்சன் தலைமையிலான குழுவினர், குழுவினர் குறித்த டிப்பர்களில் ஒரு டிப்பர் பளை பகுதியில் நிற்பதாக தகவலறிந்தனர்.

இதன்போது இன்றையதினம் அந்த இடத்திற்கு சென்ற பொறுப்பதிகாரி நிதர்சன் தலைமையிலான குழுவினர் குறித்த டிப்பரையும், டிப்பருக்கு பாதையை சீர் செய்து கொடுத்த மோட்டார் சைக்கிளையும் மீட்டதுடன், அதன் சாரதியையும் கைது செய்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் குறித்த நபருக்கு எதிராக, குறித்த சம்பவம் தொடர்பில் 27 வழக்குகள் மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now