New Updates! Fresh news just arrived.

மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி: வாழ்நாள் வாகன அனும...

News

மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி: வாழ்நாள் வாகன அனுமதிப்பத்திரத் தடை!

November 20, 2026 9:34 am
மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி: வாழ்நாள் வாகன அனுமதிப்பத்திரத் தடை!
மருதானை, சங்கராஜ மாவத்தையில் நேற்று (19) காலை சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) பேருந்து ஒன்று, அதிகாரிகளால் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கி (வழித்தட இலக்கம் 05) பயணித்த குறித்த பேருந்தின் சாரதி, பொலிஸாரின் சைகையை அலட்சியப்படுத்தி பேருந்தை நிறுத்தாமல் செலுத்திச் சென்ற போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாரதி மது போதையிலிருந்தமை அவதானிக்கப்பட்டதோடு, அவர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனைகளிலும் மது அருந்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, சந்தேகநபர் புதுக்கடை இலக்கம் 07 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதினையடுத்து, அவருக்கு 35,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, சாரதி அனுமதிப்பத்திரத்தினையும் வாழ்நாள் முழுவதும் இரத்துச் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டனை பெற்ற குறித்த நபர், நாரம்மல பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 58 வயதுடையவர் ஆவார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now