New Updates! Fresh news just arrived.

சவூதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய...

News

சவூதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவர் மையம் மீது ட்ரோன் தாக்குதல்!

March 4, 2026 8:56 am
சவூதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவர் மையம் மீது ட்ரோன் தாக்குதல்!
சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவர் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரியாத்திலுள்ள தூதரக வளாகத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதை அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இத்தாக்குதலின் இலக்கு அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவர் மையமா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையானது தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலினால் தூதரகத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதுடன், உட்பகுதி புகையினால் சூழப்பட்டுள்ளதாக குறித்த செய்திச் சேவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தூதரகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அங்கிருக்கும் பணியாளர்களை அதே இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now