New Updates! Fresh news just arrived.

வறட்சியான காலநிலை; நீர் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் ...

News

வறட்சியான காலநிலை; நீர் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் வௌியான அறிவிப்பு

March 30, 2026 12:56 pm
வறட்சியான காலநிலை; நீர் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் வௌியான அறிவிப்பு
இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஒரு நாளைக்கு சில மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

நீர்வெட்டு இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்றாலும் தற்போதைய வானிலை நிலவரத்தால் எதிர்காலத்தில் 24 மணித்தியாலமும் தொடர்ச்சியான நீர் விநியோகத்தை பராமரிப்பது கடினமாகலாம் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறைந்த காற்றழுத்தம் உள்ள பகுதிகளுக்குத் தண்ணீர் விநியோகம் செய்வதற்காக தண்ணீர் பவுசர்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now