போதைப் பாவனை சமூகச் சீர்கேடு; விழிப்புணர்வை வலியுறுத்திய ...
News
போதைப் பாவனை சமூகச் சீர்கேடு; விழிப்புணர்வை வலியுறுத்திய சாய்ந்தமருதில் சிறப்பு கவியரங்கு!
"போதை ஓர் சமூகச் சீர்கேடு" என்ற காலத்திற்கேற்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு, சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப் பாவனையின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு கவியரங்கு, செவ்வாய்க்கிழமை (07) பிற்பகல் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலின் கீழ், "வத்சர பியவர" வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெற்ற இந்நிகழ்வை, சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் றஸ்மி மூசா நெறிப்படுத்தியதுடன், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்சான் தலைமையேற்று நடத்தினார்.
சமூகத்தை அச்சுறுத்தி வரும் போதைப்பொருள் பாவனையின் விளைவுகள், இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலம், குடும்ப அமைப்பின் சீர்கேடு, ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி மற்றும் போதை ஒழிப்பில் சமூகத்தின் பொறுப்பு போன்ற பல்வேறு கருத்துக்களை மையப்படுத்தி கவிஞர்கள் தமது படைப்புகளை உணர்வுபூர்வமாகவும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் முன்வைத்தனர்.
இக்கவியரங்கில் கவிஞர்களான யூ.எல். ஆதம்பாவா, எம்.ஏ.சி. சித்தி ஜெஸீனா, முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஏ.எச். சுபையில் அஸீஸ், பாசக்கவி பாயிஸ் கரீம், எம்.ஆர். ஐகிபானு, கலைமகன் நூறுல் ஹுதா மற்றும் நேசக்கவி சாஹிர் கரீம், மருதூர் என்.எம். அலிக்கான், எம்.சி. றிஹானா பேகம், எம்.ஐ. நளீம் மற்றும் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானா மற்றும் ஓய்வு பெற்ற கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஷ்ரப் ஆகியோர் பங்கேற்று தமது கவிதைகளினை வாசித்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.
நிகழ்வின் நடுவராக ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் கலாபூசணம் ஏ. பீர்முகமது கலந்து கொண்டு, கவிதைகளின் கருத்து, மொழிநடை, கலைநயம் மற்றும் சமூகப் பெறுமதி ஆகிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடுகளை வழங்கியதுடன், இவ்வாறான இலக்கிய நிகழ்வுகள் சமூக விழிப்புணர்வை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்வில் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றிம்ஸான், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ். நளீர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சி. முஹம்மட், கலாசார உத்தியோகத்தர்களான ஏ.எல்.எம். தௌபீக், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி எம்.நௌஸாத், பிரதேச கலாசார அதிகார சபையின் தலைவர், பிரதி தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இலக்கியத்தின் வழியாக சமூகப் பொறுப்புணர்வை வளர்த்தெடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கவியரங்கு, போதை ஒழிப்புச் செய்தியை கலைநயத்துடனும் கருத்தாழத்துடனும் மக்களிடம் கொண்டு சென்ற அர்த்தமுள்ள இலக்கிய நிகழ்வாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
நூருல் ஹுதா உமர்