போதைக்கு அடிமையான இளைஞன் யாழில் உயிரிழப்பு!
News

யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - சிராம்பியடியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 3 வருடங்களாக போதைவஸ்துக்கு அடிமையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை மலசலகூடம் சென்று அங்கே மயக்கமுற்றுள்ளார்.
பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அதிகளவான போதைவஸ்து பாவனை காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பு.கஜிந்தன்