New Updates! Fresh news just arrived.

வரலாற்றில் இல்லாத அளவில் போதைப்பொருள் வேட்டை!

News

வரலாற்றில் இல்லாத அளவில் போதைப்பொருள் வேட்டை!

January 22, 2026 12:32 pm
வரலாற்றில் இல்லாத அளவில் போதைப்பொருள் வேட்டை!
பாதுகாப்புத் தரப்பினரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்புக்களில் அதிகளவிலான போதைப்பொருள் தொகையினை கைப்பற்ற முடிந்தது 2025 ஆம் ஆண்டிலேயே என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

"நாடே ஒன்றிணைவோம்" தேசிய நடவடிக்கையினுடைய முன்னேற்றம் தொடர்பில் இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ், ஹஷிஸ் மற்றும் கொக்கேய்ன் உள்ளிட்ட 10,871 கிலோகிராம் போதைப்பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தன.

இருந்தபோதிலும், இந்த அளவு 2025 ஆம் ஆண்டில் 23,692 கிலோகிராம் 307 கிராமாக அதிகரித்திருப்பதாகவும், இது (2024 உடன் ஒப்பிடுகையில்) சுமார் மூன்று மடங்கு அதிகரிப்பு என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now